Sri Swarnakarshana Bairavar

There are 8 types of Kaal Bhairavas and they are known as Ashta Bhairavas. They are the Asithanga Bhairavar, Chanda Bhairavar, Kapala Bhairavar, Krodha Bhairavar, Unmatta Bhairavar, Bhishana Bhairavar, Ruru Bhairavar and Samhara Bhairavar. Apart from these 8 forms of Ashta Bhairavas, there is an exceptional form of Bhairavs, who is chief among 64 bairavas called as Swarnakarshana Bhairava.

சிறப்பாம்சம்

கால பைரவர் என்பவர் அஷ்டாஷ்ட அதாவது அறுபத்திநான்கு (64) பைரவருள் ஒருவர். இந்த அறுபத்திநான்கு பைரவருக்கு தலைமை பைரவராக விளங்குபவரே ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷன பைரவர் ஆவார். தனம், பொன், பொருள், தெய்விக வல்லமை, ஆத்மபலம், ஆன்ம பலம், பூலோக உயர் பதவி, அனைத்து சித்துக்களையும் அளிக்க கூடியவர்……

பைரவ சிறப்பாம்சம்

அஷ்டமியன்று ஸ்ரீ ஸ்வர்ண பைரவரை புஜிக்கும் அஷ்டலஷ்மிகள்

அஷ்டலஷ்மிகள் தங்களிடத்தில் பொருள் வேண்டி பிரார்த்திக்கும் அன்பர்களுக்கு பொருள் தருவதற்காக அஷ்டலஷ்மிகள் வீரலஷ்மி, கஜலஷ்மி,சந்தான லஷ்மி, தான்ய லஷ்மி, ஆதி லஷ்மி, விஜய லஷ்மி, ஐஸ்வர்ய லஷ்மி, தனலஷ்மி அனைவரும் ஸ்ரீ ஸ்வர்ண பைரவரிடம் பொருள் பிராத்திக்கின்றார்கள். அது மட்டுமின்றி இரும்பை தங்கமாக மாற்றும் ஸ்ரீ கொங்கன சித்தர் ஸ்வர்ணாகர்ஷன பைரவரை உபாசித்தவர்.

காலச்சக்ராதிபதி

சர்வ வல்லமை பொருந்தியது காலம். சூரபத்மன், ராவணன், வாலி முதல் பல சூரர்களையும் இந்த காலம் விழுங்கியுள்ளது, காலத்தின் அன்னையாக விளங்குபவளே காளி, காலத்தின் தந்தையாக விளங்குபவரே கால பைரவர். இந்த காலத்தை ஆட்சி செய்யும் தெய்வ மூர்த்திகளை வணங்கி அனுக்ரஹம் பெருகின்றவனே காலம் தாண்டி வாழ்கின்றான். அதாவது அவன் உயிர் பிரிந்தாலும் அவன் நாமம் நிலைத்து நிற்கிறது இதுவே சாகாநிலை (ETERNITY) மீண்டும் இனறவன் விரும்பினால் பணியாற்ற பிறக்கிறான் அதே ஆற்றலோடும் ஞானத்தோடும்.

சனீஸ்வரர் மூர்த்தியின் குரு

சாயா தேவியின் மகனான சனீ பகவானுக்கும் சம்ஞா தேவியின் மகனான எமதர்மனுக்கும் பல முறை பகை உண்டானது. ஒரு முறை எமமூர்த்தி தன் தண்டத்தால் சனி மூர்த்தியின் காலில் தாக்க அதுவே சனி மூர்த்தியின் கால் ஊனமாக காரணமாயிற்று, தாங்க முடியாத துயரத்துக்கு ஆளான சனி முர்த்தி பல ஆயிரம் ஆண்டுகளாக கால பைரவரை நோக்கி தவம் இருக்க பைரவரே நேரில் தோன்றி சனியின் துன்பத்தை நிவர்த்தி செய்து நவகோள்களின் மிகசக்தி வாய்ந்த கோலாக உருமாற்றி சனீஸ்வரன் என்ற ஈஸ்வர பட்டத்தையும் வழங்கினார்.

தலைமை பைரவர் சிறப்பு

கால பைரவர் என்பவர் அஷ்டாஷ்ட அதாவது அறுபத்திநான்கு (64) பைரவருள் ஒருவர். இந்த அறுபத்திநான்கு பைரவருக்கு தலைமை பைரவராக விளங்குபவரே ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷன பைரவர் ஆவார். தனம், பொன், பொருள், தெய்விக வல்லமை, ஆத்மபலம், ஆன்ம பலம், பூலோக உயர் பதவி, அனைத்து சித்துக்களையும் அளிக்க கூடியவர். தரித்திரம், வறுமை, பிணி, வேலையின்மை சொல்லமுடியாத துயரங்கள் அனைத்தையும் நீக்கவும், நாட்டில் உள்ள தரித்திரத்தை போக்கவும் ஒரே உபாயம் ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷன பைரவரே. அனைத்து வளங்களையும் ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷன பைரவர் வழங்குபவர். இருப்பினும் கிடைத்த பொன், பொருளையும் இழக்காமல் தக்க வைத்து கொள்வதே மிக முக்கியம், கிடைத்த பொருளையும், வளத்தையும், நிதியையும் என்றும் பரிபோகாமல் காப்பவளே ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷன பைரவியின் மடியில் அமர்ந்திருக்கும் ஸ்வர்ண பைரவி என்கின்ற ஸ்ரீ விஜய சித்ராம்பா தேவி ஆவாள், தேவியுடன் இருக்கும் பைரவ வழிபாடே சர்வமும் அளித்து பூரணத்துவம் அளிக்கிறது.

அஷ்ட பைரவரும், அஷ்ட தேவியரின் வழிபாட்டு பலன்கள்

  • செயல்திறன், மனோபலம்.
  • ஞானம் , யோகம் , தெளிவு.
  • வல்லமை , போட்டிகளில் வெல்ல ஆத்மபலம்.
  • மாபெரும் செயலுக்கான திறன், ஆற்றல், வலிமை, தைரியம்.
  • தீய குணங்களும் , பாவ செயல்களிளும் இருந்து விடுபட.
  • ஆணவம் , அகம்பாவம் , தற்பெருமை ஒழிய.
  • துஷ்ட சக்திகள் விலக , தீய எண்ணங்களில் இருந்து விடுபட.
  • மலைபோல் திரண்டுள்ள பாவங்களும் துஷ்கர்மங்களும், பூர்வ ஜன்ம பாவங்கள் ஒழிய.
    இருந்து விடுபட.
Scroll to Top
Scroll to Top