மஹாவித்யா பகளாமுகி
ஒரு கையால் எதிரியின் நாக்கைப் பிடித்துக் கொண்டும் மற்றொரு கையால் கதாயுதமும் தரித்தவள். அசுரர்களை அழிக்க முருகனுக்கு, பரமன் ‘ப்ரஹ்மாஸ்த்திரம்’ என வழங்கப்படும் பகளா முகீ மந்திரத்தை அருளினார். “பீதாம்பரி, பிரம்மஸ்திர ரூபிணி” என்ற பெயரில் வணங்கப்படும் இவள், மஞ்சள் ஆடை உடுத்தி, இளம்பிறை சூடி காணப்படுகிறாள்.
உலகம் படைக்கப்பட்டப் பின்னர் சத்யுகத்தில் ஒரு முறை பெரும் கடல் சீற்றத்துடன் கூடிய பிரளயம் ஏற்பட்டு உலகமே அழிந்து விடும் நிலைக்குச் சென்று விட்டது. அதன் கோர தாண்டவத்தைத் தன்னால் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது என மனம் பதறிய காக்கும் கடவுளாக படைக்கப்பட்ட விஷ்ணு பகவான், சௌராஷ்டிராவில் இருந்த ஒரு தனிமையான இடத்தில் சென்று இந்த பிரபஞ்சம் அழிவில் இருந்து காக்கப்பட வேண்டும் என வேண்டிக் கொண்டு தவத்தில் அமர்ந்து கொண்டார். கடுமையான தவத்தின் விளைவாக அவருடைய நாபியில் இருந்து வெளிவந்த ஜோதியும் ஆகாயத்தில் இருந்த நட்சத்திரங்களின் ஒளியும் ஒன்று சேர அந்த ஒளி வெள்ளத்தில் மஞ்சள் நிற ஆடை உடுத்திய ஒரு பெண் உருவில் தோன்றினாள் பகளாமுகி தேவி. இப்படியாகத் தோன்றிய பகுளாமுகி தேவி உடனடியாக விஷ்ணுவிடம் சென்று இந்த உலகை அழிவில் இருந்து காப்பற்ற பார்வதி தேவி தன்னை தோற்றுவித்து அனுப்பி இருக்கின்றாள் என்றும் ஆகவே கவலைப்பட வேண்டாம் என்று கூறி விட்டு இயற்கையின் சீற்றங்களை நொடிப் பொழுதில் அடக்கி, அவற்றை தன்னுள் கிரகித்துக் கொண்டு விட்டாள். தவத்தை முடித்துக் கொண்ட விஷ்ணு பகவானுக்கு தெய்வீகத்தையும் ஆன்மீக சிந்தனைகளையும் அழித்துக் கொண்டு உலகில் கேடு விளைவித்துக் கொண்டு இருந்த தீய சக்திகளை அடக்க பார்வதி தேவியானவள் பகளாமுகி தேவியை தன்னுள் இருந்து படைத்து அனுப்பி இருக்கின்றாள் என்ற உண்மை புரிந்தது. இப்படியான நிலையில் அவதரித்தவளே பகளாமுகி தேவி ஆவாள்.
பலன்கள்:அடிக்கடி விபத்துக்கள், நோய்கள் ஏற்படாது.எதிரிகளின் கெட்ட செயல்கள் நம்மிடம் பலிக்காது.பித்ரு தோஷம்,கிரக தோஷம் ,மாந்த்ரீக பாதிப்புகள் நீங்கும்.