குளிகன் என்ற மாந்தியால்

இராவணன் கொல்லப்பட்டது குளிகனால்

குளிகன் என்கின்ற மாந்தி சனீஸ்வருடைய புத்திரர்.இவரே பைரவ உபாசனையில் வல்லவர். குளிகை நேரம் பைரவ உபாசனைக்கு,மிகவும் உரிதானதாகும். அகஸ்தியர் மஹரிஷி ராவணனுக்கு முடிவு காலம் வந்து விட்டதை ஸ்ரீராமருக்கு உணர்விக்கும் காலத்தை நோக்கிக் காத்திருந்தார். ராவணனை வீழ்த்த சரியான நேரம் மாந்திக்குரிய குளிகைக் காலம் என்பதை ஸ்ரீராமரிடம் அகத்தியர் ரகசியமாகத் தெரிவித்தார்.ஸ்ரீராமருக்கு ஆதித்ய ஹ்ருதய மந்திரங்களை உபதேசித்தார்.அனைத்து உபாசனைகளையும் அறிந்திருந்த ராவணன் பைரவ உபாசனையை மட்டும் அறியாதிருந்தான். பூமியையே துன்புறுத்தி வந்த ராவணனை, ஸ்ரீராமர், ஆதித்ய ஹ்ருதய மந்திரம் ஜபிக்க பத்தாவது கிரகமான சனீஸ்வரருடைய புத்திரர் குளிகனே இராமர் எய்த பாணத்தில் வந்து அமர்ந்து ராவணனை வீழ்த்தினார். அதனால் குளிகனே ராவணனை மாய்த்தார். குளிகை நேரத்தில் பைரவரை வணங்குவதால் எத்தகைய வல்வினைகளும் நீங்கும்.

Scroll to Top
Scroll to Top