புவி ஈர்ப்பு கடவுள்
அண்டத்தை படைத்த ஈசன் ஜீவராசிகளை படைக்க ஆயத்தமானார், அப்போதோ அனைத்து பொருள்களும், வஸ்துக்களும் மிதந்தன, அத்தருணத்தில் ஈசனின் ஒருபகுதி சக்தியும், ஸ்கந்தனின் இன்னொரு பகுதி சக்தியும் ஒன்றினைந்து தோற்றமே குக்குடாப் ஜதரர், இவருக்கு தேனாபிஷேகம் செய்து வழிபட்டால் பூகம்பங்கள் வராது, சமுதாய குற்றங்கள், கொலை, கொள்ளை அனைத்து தீவினை செயல்கள் அதிகரிக்கும் போது பூமாதேவியின் சாபமாக பூகம்பங்கள் நேர்கின்றன.
ஓம் ஸ்ரீ குக்குட ஜதராய நம
முக்கியமாக வழிபட வேண்டியவர்கள்
பல அடுக்குமாடி கட்டிடங்களை கட்டும் சிவில் என்ஜினீயர்களும் , கட்டிட நிறுவனங்களும் , முதலீட்டாளர்களும் , உயரமான கட்டிடத்தில் குடியிருக்கும் மக்களும் கட்டாயமாக வழிபட வேண்டிய மூர்த்தி.
பைலட்களும், விமானத்துறையில் பணிபுரிபவர்களும் அதன் நிறுவன தலைவர்களும், தொடர்ச்சியாக விமானத்தில் பயணிக்கும் மக்களும் வணங்க வேண்டிய மூர்த்தி வழிபாட்டு பயனால் குக்குடாப் ஜதரரின் ரட்சசக்தி பெருகி விமான விபத்தை தடுத்திடலாம், புவி ஈர்ப்பு சக்தியை விமானங்கள் கடந்து பறப்பது ஸ்ரீ குக்குடாப் ஜதரர் கடவுளின் வரப்ரசாதமும், கருணையுமாகும்.
குறிப்பு
ஸ்ரீ குக்குடாப் ஜதரர் மூர்த்தி அவதார ரகசியம் மறைந்துவிடக் கூடாது என்பதற்காக உத்தம ஆன்மிக பெரியோர்கள் திருப்போரூர் முருகன் அலையத்தில் இரண்டாவது கோஷ்டத்தில் குக்குடர் என்று பிரதிஷ்டை செய்துள்ளனர், இவரின் பிரதிஷ்டைக்கு ரகசிய அட்சரமும், பிரதிஷ்டை முறையும் உண்டு, இதை எம்குரு மூலமாக அறிந்து முறைப்படி ஆலய ஈசான்யத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.