மஹா சாம்ராஜ்ய லக்ஷ்மி

குடும்பத்துடன் அருள்பாலிக்கும் குபேரர்

மன்னர்களுக்கெல்லாம் மன்னராக விளங்குபவர்களே மாமன்னர்கள் சீதா தேவியின் தந்தை ஜனக மஹாராஜர் , ராஜ ராஜ சோழன் , மற்றும் சோழ மன்னர்கள் போன்றவர்கள். இந்த மாமன்னர்கள் ரகசியமாக வழிப்பட்ட அதிரகசியமான உச்சகட்ட கோலமே மஹா சாம்ராஜ்ய லக்ஷ்மி தேவி. சித்த கிரந்தத்திலிருந்து எடுக்கப்பட்ட ரகசிய பீஜ மந்திரத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அஷ்ட லக்ஷ்மிகளின் ஒரு லக்ஷ்மியான கஜலக்ஷ்மி இருபுறமும் இரண்டு கஜங்கள்(யானை) இருப்பதே தரிசித்திருப்போம் சாம்ராஜ்ய லக்ஷ்மியோ அமிர்த கலசத்தை தாங்கியுள்ள 5 கஜங்கள் (யானை) கொண்ட ரதத்தில் அமர்த்திருப்பவள். 5 என்பது நவக்கிரகத்தில் உள்ள புதன் கிரகத்திற்கு உரித்தான எண். அமிர்தம் உண்டால் ஆயுள் நீட்டிப்பு என்று ஒரு புறம் இருந்தாலும் அமிர்தத்திற்கு என்றுமே செல்வம் வசியமாகும் இதன் காரணமாகவே செல்வம் அருளக்கூடிய தெய்வங்கள் அமிர்த கலசம் கரத்தில் தாங்கியுள்ளனர்.

தலைமை பொறுப்புக்கு முயற்சிப்பவர்களும் நாடாளும் நிலையில் உள்ளவர்களும் நிறுவனத்தை பெரிதளவில் விரிவுபடுத்த முயற்சிப்பவர்களும் புரட்சி ஏற்ப்படுத்த, அகண்ட புகழ் அடைய வேண்டுவோரும் வணங்க வேண்டிய மஹா சாம்ராஜ்ய லக்ஷ்மி தேவி.

ஓம் ஸ்ரீ மஹா லக்ஷ்மி தேவியே நமஹ

Scroll to Top
Scroll to Top